பீட்ரூட் சூப் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீட்ரூட் - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 1

உருளை கிழங்கு - 1

எழுமிச்சை பழம் - பாதி

புதினா - சிறிது

ப்ரெஸ் க்ரீம் - 1/2 கப்

மிளகு தூள் - சிறிது

எண்ணெய் - தாளிக்க

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பீட்ரூட்,உருளைகிழங்கை தோல் எடுத்து வேகவைத்து கொள்ளவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி எண்ணெயில் தாளித்து கொள்ளவும்.

பின் காய்கறிகளுடன்,வெங்காயத்தை சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

பின் இதில் எழுமிச்சைபழம் சாறு சேர்த்து அடுப்பில்வைத்து கொதிக்கவிடவும்.பின் மிளகு தூள்,உப்பு,சேர்த்து தண்ணீர் தேவைக்கு ஏற்ப சேர்த்து கொதித்ததும் இறக்கி ப்ரெஸ்க்ரீம், புதினா சேர்த்து சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: