பீட்ரூட் சூப்
0
தேவையான பொருட்கள்:
காரட் - 2
பீட்ரூட் - 1
பாசி பருப்பு - 1 மேசைக்கரண்டி
ஆலிவ் ஆயில் அல்லது வெண்ணை - 2 தேக்கரண்டி
தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
மிளகு பொடி - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறி மற்றும் பருப்பை குக்கரில் 1 ஸ்டீம் விட்டு எடுக்கவும்.
மிக்ஸ்யில் ஒன்றும் பாதியுமாக அரைத்து 3 கிளாஸ் தண்ணீர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
வடிக்கட்டி தக்காளி சாஸ், மிளகு பொடி, உப்பு மற்றும் வெண்ணை சேர்த்து சூப் பவுலில் பரிமாறவும்.