பாஸ்தா சூப்
0
தேவையான பொருட்கள்:
ஏதாவது பாஸ்தா இரண்டு வகை - தலா 1/2 கப்
வெட்டிய கரட் - 1/2 கப்
வெட்டிய அஸ்பராகஸ் - 1/2 கப்
வெட்டிய பூசணிக்காய் - 1/4 கப்
வெட்டிய தக்காளி - 1/2 கப் (2)
மிளகுதூள் - தேவையான அளவு
பார்மஜான் சீஸ் - 2 அல்லது 3 மேசைக்கரண்டி
காய்ந்த பேசில் - 1/4 தேக்கரண்டி
காய்ந்த ஒரெகானோ - 1/4 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பாஸ்தாவை 4 கப் தண்னீர் விட்டு அவிக்கவும்.
பாஸ்தா அரைவாசி அவிந்ததும் அதனுள் வெட்டிய காய்கறிகளைப்போட்டு மூடி அவிக்கவும்.
காய்கறிகள் அவிந்ததும் சீஸ், உப்பு, மிளகுதூள், பேசில், ஒரெகானோ சேர்த்து கிளறி இறக்கி சூப் பவுலில் சூடாக பரிமாறவும்.