பாலக் கீரை சூப்
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்து பொடியாக நறுக்கிய பாலக் கீரை - 1 கட்டு
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் - 1
பொடியாக நறுக்கிய உருளை கிழங்கு - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி
வெண்ணைய் - 1 மேசைக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
காய்ச்சி ஆறவைத்த பால் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
வாணலியில் வெண்ணைய் போட்டு உருகியதும் வெங்காயத்தை போட்டு ஒரு வதக்கு வதக்கி அதனுடன் இஞ்சி,பூண்டு விழுது, உருளையை சேர்த்து வதக்கவும்.
வதங்கியதும் கீரையை சேர்த்து ஒரு வதக்கு வதக்கி நிறம் மாறும் முன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.
ஆறியதும் அரைத்து வடிகட்டி வைக்கவும்.
வாணலியில் அரைத்து வடிகட்டியதை ஊற்றி அதனுடன் பால் சேர்த்து கலக்கி 4 நிமிடம் கொதிக்கவைக்கவும்.
அதனுடன் உப்பு,மிளகுத்தூள் சேர்த்து கிளறி இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.