பார்லி சூப் (1)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பார்லி அரிசி - 1 கப்

காய்கறி வேக வைத்த தண்ணீர் - 1 லிட்டர்

பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 4

கேரட் - 2

எண்ணெய் - 1/2 தேக்கரண்டி

மிளகுத்தூள் - தேவையான அளவு

உப்பு,- தேவையான அளவு

செய்முறை:

பார்லியை இரவே தண்ணீர் விட்டு ஊற வைக்கவும்.

தண்ணீரை வடித்து விட்டு 2 கப் தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைப்பதுபோல் வேக வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் விட்டு வெங்காயத்தைப்போட்டு வதக்கவும்.

வதங்கியதும் அதில் வேக வைத்த பார்லி, காய்கறி தண்ணீர், நறுக்கிய கேரட் போட்டு மூடி மெல்லிய தீயில் 20 நிமிடங்கள் கொதிக்க விடவும்.

இறக்கி உப்பு, மிளகுத்தூள் சேர்த்து சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: