பாதாம் சூப்
தேவையான பொருட்கள்:
பாதாம் - 20
உருளை - 1
நறுக்கிய டர்னிப் அல்லது நூல்கோல் - 1/4 கப்
வெண்ணை - 1 தேக்கரண்டி
பால் - 1/2 கப்
பச்சை மிளகாய் – 1
சர்கரை - 2 தேக்கரண்டி
சோள மாவு - 1 மேசைக்கரண்டி
மிளகு பொடி - தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பாதாமை அரை மணி நேரம் வெந்நீரில் ஊரவைத்து, தோலை உரித்து, மிருதுவாக அரைக்கவும்.
காய்கறிகளை தோலுரித்து அரிந்து வைக்கவும்.
குக்கரில் வெண்ணெயை போட்டு காய்கறிகளை போட்டு, நிரம் மாறாமல் வதக்கவும்.
அதனுடன் பாலையும், ஒருக்கப் தண்ணீரையும் சேர்த்து, அதனுடன் பச்சை மிளகாய் போட்டு, ஒரு விசில் வரும் வரை வேகவைக்கவும்.
ஆறியவுடன் பச்சைமிளகாயை எடுத்துவிட்டு, காய்கறிகளை அரைத்து வடிகட்டிவைக்கவும்.
இதனுடன் அரைத்த பாதாம் விழுது, உப்பு, சர்கரையை சேர்த்து கொதிக்க விடவும்.
கொதிவந்தவுடன், தீயை குறைக்கவும்.
சோள மாவை அரைக்கப் தண்ணீரில் கரைத்து, கொதித்து கொண்டிருக்கும் சூப்பில் சேர்க்கவும்.
மிளகு தூளை பரிமாறும்போது சேர்க்கவும்.