பச்சை பட்டாணி சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 1/4 கிலோ

பெரிய வெங்காயம் - 1

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

இஞ்சி - 1 துண்டு

பூண்டு - 3 பல்

கார்ன் ஃப்ளார் மாவு - 1/2 மேசைக்கரண்டி

செலரி (விருப்பப்பட்டால்) - 1

கொத்தமல்லி தழை - சிறிது

வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

பட்டாணியை வேக வைத்து, மிக்ஸியில் அரைத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயம், இஞ்சி, பூண்டு எல்லவற்றையும் பொடியாக நறுக்கவும்.

வாணலியில் வெண்ணெய் விட்டு உருகிய பின், வெங்காயம், இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கவும். (செலரி சேர்ப்பதாக இருந்தால் அதையும் பொடியாக நறுக்கி சேர்க்கவும்).

கார்ன் ஃப்ளார் மாவை அதனுடன் சேர்த்து வதக்கவும்.

அரைத்த பட்டாணியை சூப் வடிகட்டியில் வடித்து, வதக்கியதுடன் சேர்த்து கொதிக்க விடவும்.

உப்பு, மிளகு தூள் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி சூப் பவுலில் மேலாக க்ரீம் விட்டு பரிமாறவும்.

குறிப்புகள்: