நொய் கஞ்சி (காய்ச்சலுக்கு)
0
தேவையான பொருட்கள்:
அரிசி - 100 கிராம்
சீரகம் - 2 தேக்கரண்டி
மிளகு - 6
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
மிளகு, சீரகத்தை வெறும் வாணலியில் பொரிய விட்டு எடுத்து வைக்கவும்.
அரிசியை சிவக்க வறுத்து ஆற விடவும்.
அரிசி, மிளகு, சீரகத்தை மிக்ஸியில் ரவை போல் (நொய்) பொடிக்கவும்.
இதை எடுத்து வைத்துக் கொண்டு தேவையான போது, தேவையான அளவுக்கு கஞ்சி வைத்து கொள்ளலாம்.
2 தம்ளர் தண்ணீரை கொதிக்க விடவும்.
நன்கு கொதிக்கும் போது, 2 மேசைக்கரண்டி அளவு பொடித்த நொய்யை சேர்த்து வேக விடவும்.
நொய் நன்கு வெந்ததும் தேவையான உப்பு சேர்த்து கலக்கி சூப் பவுலில் குடிக்கவும்.