தக்காளி சூப் (7)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

வெங்காயம் - 3

தக்காளி - 2

பச்சைமிளகாய் - 3

இஞ்சி - ஒரு துண்டு

பூண்டு - 6 பல்

பால் - 1 கப்

மைதா - 1 மேசைக்கரண்டி

வெண்ணெய் - 1 மேசைக்கரண்டி

மிளகு தூள் - தேவையான அளவு

சிவப்பு கலர் பொடி (தேவையானால்) - ஒரு சிட்டிகை

எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டு ஆகியவற்றை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஒரு வாணலியில் எண்ணெயைக் காயவைத்து தக்காளி தவிர, மற்ற காய்கறிகளைச் சேர்த்து வதக்கி, பிறகு தக்காளி, உப்பு சேர்த்து வதக்கவும்.

பின்னர் மூன்று டம்ளர் தண்ணீரை சேர்த்து வேக வைக்கவும். வெந்ததும் இறக்கி ஆறவைத்து, மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.

வாணலியில் வெண்ணெயை உருக்கி மைதா சேர்த்து வதக்கவும். பின்னர் சிறிது சிறிதாகப் பால் சேர்த்துக் கிளறிக்கொண்டே கொதிக்க வைக்கவும்.

இப்போது சிவப்பு கலர் சேர்த்துக் கொள்ளவும். சற்று நேரம் கொதித்ததும், வடிகட்டிய தக்காளி சூப்பை ஊற்றி, மேலும் 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து மிளகுத்தூள் தூவி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: