தக்காளி சூப் (6)
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2
பச்சை மிளகாய் - 3
பெரிய வெங்காயம் - 1
இஞ்சி - 1/2 அங்குலத்துண்டு
பூண்டு - 6 பல்
பட்டை - 2 துண்டு
கிராம்பு - 2
கறிவேப்பிலை - ஒரு கொத்து
கொத்தமல்லித் தழை - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
எலுமிச்சை - அரை மூடி
எண்ணெய் - 3 தேக்கரண்டி
உப்பு - 3 தேக்கரண்டி
செய்முறை:
தக்காளியை துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
இஞ்சியை தோல் சீவி துண்டுகளாக நறுக்கவும். இஞ்சி மற்றும் பூண்டை தட்டி வைக்கவும்.
பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைத்துக் கொள்ளவும்.
வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் தக்காளி துண்டுகளை போட்டு, மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.
கடாயில் மூன்று தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, கிராம்பு தாளித்து, தட்டி வைத்துள்ள இஞ்சி, பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு வெங்காயம், கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும் தக்காளி வேக வைத்த தண்ணீரை ஊற்றி, கால் தேக்கரண்டி மஞ்சள் தூள் சேர்க்கவும்.
அதனுடன் வேக வைத்த தக்காளியை தோல் நீக்கி மசித்துவிட்டு சேர்க்கவும்.
பின்னர் மூன்று தேக்கரண்டி உப்பு சேர்த்து கால் கப் தண்ணீர் ஊற்றி நன்கு நுரைவரும் வரை கொதிக்கவிட்டு சிறிது கொத்தமல்லித் தழை தூவி இறக்கிவிடவும்.
அரை மூடி எலுமிச்சைச் சாறு பிழிந்துவிட்டு சூப் பவுலில் பரிமாறவும்.