தக்காளி சூப் (4)
1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 1/4 கிலோ
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
சோள மாவு- 2 தேக்கரண்டி
மிளகு பொடி - 1 தேக்கரண்டி
சீரக பொடி - 2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம் - ஒன்றில் பாதி
கொத்தமல்லி - தேவையான அளவு
செய்முறை:
நன்கு பழுத்த பெங்களூர் தக்காளிகளைக் கழுவி, பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றி, நறுக்கின வெங்காயத்தைப் போட்டு வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அரைத்து வைத்துள்ள தக்காளிச் சாற்றுடன் சோளமாவை கலந்து கொதிக்கவிடவும்.
நன்கு கொதித்து திக்காக வந்தவுடன் அதில் வறுத்து வைத்துள்ள வெங்காயம் சேர்க்கவும்.
அத்துடன் மிளகு மற்றும் சீரகப் பொடி சேர்த்து, கொத்தமல்லி தழையைத் தூவி சூடாகப் சூப் பவுலில் பரிமாறவும்.