தக்காளி சூப் (3)
தேவையான பொருட்கள்:
தக்காளி - 10
இஞ்சி - 1 அங்குலம்
பூண்டு - 4 பல்
சிவப்பு மிளகாய் - 4
கறிவேப்பிலை - ஒரு இனுக்கு
தனியா - 2 தேக்கரண்டி
தண்ணீர் - 4 1/2 கப்
மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
சீரகம் - 3 சிட்டிகை
கடுகு - 3 சிட்டிகை
எண்ணைய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளியை சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.
பூண்டு, இஞ்சி ஆகியவற்றை தோல் நீக்கி பொடி பொடியாக நறுக்கவும்.
தனியாவை வெறும் வாணலியில் வறுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி தக்காளி,பூண்டு, தனியா,இஞ்சி, மஞ்சள் பொடி, மொத்த கறிவேப்பிலையில் பாதி ஆகியவற்றை போட்டு நன்றாக கொதித்து தக்காளி வெந்தபின் இறக்கி ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைக்கவும்.
அரைத்த கலவையை வடிகட்டி உப்பு சேர்த்து மீண்டும் அடுப்பில் வைத்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு, சீரகம் தாளிக்கவும்.
இதனுடன் மீதியுள்ள கறிவேப்பிலை மிளகாய் ஆகியவற்றையும் போட்டு வறுக்கவும்.
இந்தக் கலவையையும் சூப்பில் கொட்டி சுடச்சுட சூப் பவுலில் சாப்பிடலாம்.