தக்காளி சூப் (2)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பெங்களூர் தக்காளி - 3

பெரிய வெங்காயம் - 1

கோதுமை மாவு - 1 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

தக்காளியையும், வெங்காயத்தையும் சுமாரான துண்டுகளாக நறுக்கி ஒரு தம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும்.

வெந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்து, பெரும் துளையுள்ள வடிகட்டியில் வடிகட்டவும்.

கோதுமை மாவை வெறும் வாணலியில் வறுத்து சேர்த்து 1 கப் தண்ணீர், மிளகு தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: