தக்காளி சூப்
தேவையான பொருட்கள்:
தக்காளி - 2 பெரியது
சின்ன வெங்காயம் - 5
உருளை கிழங்கு - 1
இஞ்சி - சிறிய துண்டு
மிளகுதூள் - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
வெண்ணெய் (விருப்பப்பட்டால்) - 1 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
தண்ணீர் - 2 டம்ளர்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
தக்காளி யை நான்காக கீறி, வெங்காயம், இஞ்சி,சீரகம், பூண்டு, உருளைக்கிழங்கு நான்காக வெட்டி போட்டு அதனுடன் தண்ணீர் ஊற்றி குக்கரில் 3 விசில் வரவிடவும் 2 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்
பிறகு வேகவைத்தவைகளை நன்கு மசித்து அதனுடன் வெண்ணெய், மிளகுதூள் உப்பு சேர்த்து வடிகட்டிஅதனுடன் பொரித்த ப்ரெட் துண்டுகளை பொட்டு பரிமாரவும்
நம் விருப்பபடி மிளகுதூள் கூட்டிகொள்ளலாம். மிளகுதூள் அதிகம் போட்டால் இன்னும் சுவையாக இருக்கும்
விருப்பபட்டால் 2 ஸ்பூன் கார்ன்பிளாரை (சோளமாவு) தண்ணீரில் கரைத்து சூப்புடன் கலந்து ஒரு கொதி கொதிக்கவிட்டும் இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.