டயட் சூப்

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

வெள்ளை வெங்காயம் - 3

செலரி - ஒரு கட்டு

குடை மிளகாய் - 2

முட்டைக்கோஸ் - 1/ கிலோ

தக்காளி- 3

மிகுத் தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகள் அனைத்தையும் நன்கு கழுவி, மிகவும் பொடியாக நறுக்கி வைக்கவும். (அல்லது) ஃபுட் ப்ராசசரில் போட்டுப் பொடியாகும் வரை ஓடவிட்டு எடுக்கவும்.

நறுக்கிய காய்கறிகளை குக்கரில் போட்டு 3 லிட்டர் தண்ணீர் ஊற்றி மூடி அடுப்பில் வைக்கவும்.

5 அல்லது 6 விசில் வரவிட்டு இறக்கிவிடவும்.

அதனுடன் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்துக் கலந்து, பவுலில் ஊற்றி சூடாகப் பரிமாறவும்.

குறிப்புகள்:

செயற்கைப் பொருட்கள் எதுவும் சேர்க்காமல் செய்யப்படும் சூப். உடல் இளைப்பதற்கு இந்த டயட் சூப் மிகவும் உறுதுணையாக இருக்கும்.

ஒரு நாளைக்கு எவ்வளவு முடியுமோ, அவ்வளவு குடிக்கலாம்.