செட்டிநாடு சூப்

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு நீர் - 2 கப் (பருப்பு வேகவைத்த நீர் மட்டும் போதும் பருப்பு வேண்டாம்)

லவங்கம் - 1

பொடியாக நறுக்கிய தக்காளி - 1

பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் - 1

பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1

நசுக்கிய பூண்டு - 2 பல்

பால் - 1 கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வாணலியில் 2 ஸ்பூன் எண்ணைய் விட்டு லவங்கம் போட்டு பச்சைமிளகாய், வெங்காயம், தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.

அதனுடன் துவரம் பருப்பு நீர் ஊற்றி உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.

இறக்கும் சமயத்தில் பூண்டு போட்டபின் காய்ச்சி நன்கு ஆறிய பாலை ஊற்றி இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: