சூப் கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
சூப் செய்ய:
கோழி - 1
சின்ன வெங்காயம் - 20
மிளகு - 3 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் (சோம்பு) - 3 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
பட்டை - 2 துண்டு
ஏலக்காய் - 1
இஞ்சி, பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 5 கொத்து
உப்பு - தேவையான அளவு
கொழுக்கட்டை செய்ய:
பச்சரிசி - 2 கப்
தேங்காய் துருவல் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கொழுக்கட்டை செய்ய:
பச்சரிசியை 1 மணிநேரம் ஊற வைத்து ஈரம் போக துணியில் உலர்த்தவும்.
மிக்ஸியில் ரவையாக பொடிக்கவும்.
அதனுடன் தேங்காய் துருவல், உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து கொழுக்கட்டை மாவு பதத்திற்கு அரைக்கவும்.
சிறு உருண்டைகளாக்கி கொதிக்கும் நீரிலோ அல்லது ஆவியிலோ வேக வைக்கவும்.
சூப் செய்ய:
கோழியை சுத்தம் செய்து துண்டுகளாக்கவும். மிளகு, பெருஞ்சீரகம், சீரகம், பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை மிக்ஸியில் பொடிக்கவும்.
இதனுடன் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
குக்கரில் கோழி, அரைத்த மசாலா, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, 6 கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். 3 விசில் வந்ததும் இறக்கவும்.
குக்கரை திறந்த பிறகு செய்து வைத்துள்ள கொழுக்கட்டை சேர்த்து 10 நிமிடம் குறைந்த தீயில் கொதிக்க விடவும்.
சூப் கொழுக்கட்டை ரெடி.