சிக்கன் சூப் (6)
தேவையான பொருட்கள்:
சிக்கன் வேகவைக்க:
சிக்கன் - 1
வெங்காயம் - 2
இஞ்சி பூண்டு - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
கார்ன் வேகவைக்க:
சோளம் - 1/4 கிலோ
சர்க்கரை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
க்ரீம் தயாரிக்க:
பட்டர் - 100 கிராம்
மைதா - 50 கிராம்
பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1/2 பாகம்
பால் - 2 கப்
கடைசியில் கரைத்து ஊற்ற:
கார்ன் ஃப்ளார் மாவு - 50 கிராம்
முட்டை - 1
வெள்ளை அல்லது கருப்பு மிளகு தூள் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - ஒரு டிராப்
செய்முறை:
சிக்கனில் கொஞ்சம் உப்பு, இஞ்சி பூண்டு பேஸ்ட் (அ) (இஞ்சி பூண்டு பொடியாக அரிந்தது வெங்காயம் பொடியாக அரிந்தது போட்டு வேகவைத்து வடிகட்டி தண்ணீர் தனியாக, எலும்பிலிருந்து சிக்கன் துண்டுகள் தனியாக எடுத்து வைக்கவும்.
கார்னில் கொஞ்சம் உப்பு, தண்ணீர் பால் ஒரு கப் சேர்த்து வேகவைத்து ஆறியதும் ஒன்றும் பாதியுமாக அரைத்து தனியாக வைக்கவும்.
ஒரு பெரிய சட்டியில் பட்டரை போட்டு அதில் மைதாவை லேசாக தூவி தூவி கிளறி அரை வெங்காயத்தையும் போட்டு ஒரு கப் பாலில் சேர்க்கவும்.
பிறகு வடிகட்டிய சிக்கன் தண்ணீரை சேர்க்கவும்.
பிறகு தனியாக வைத்த சிக்கன் துண்டுகளை சேர்க்கவும்.
பிறகு ஒன்றும் பாதியுமாக அரைத்த கார்னை சேர்க்கவும்.
நல்ல கொதிக்கட்டும் கார்ன் மாவை தண்ணீரில் கரைத்து ஊற்றவும்.
நல்ல கொதிக்கும் போது இரண்டு முட்டையை நுரை பொங்க அடித்து ஒரு கையால் ஊற்றிக்கொண்டே மறுகையால் கிளறவும் விட்டால் கொதகொத என்று ஆகிவிடும்.
பிறகு மிளகு துள், சோயாசாஸ் ஒரு டிராப் ஊற்றி இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.