சிக்கன் சூப் (4)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் க்யூப் - 1

தண்ணீர் - 3 கப்

தேங்காய் எண்ணெய் - 1 தேக்கரண்டி

சின்ன வெங்காயம் - 2

பொடியாக நறுக்கிய மல்லி இலை - 2 தேக்கரண்டி

செய்முறை:

இதற்கு உப்பு தேவையில்லை க்யூபிலேயே உள்ளது. முதலில் தண்ணீரை கொதிக்க வைத்து அதனுடன் க்யூபை கரைத்துக் கொள்ளுங்கள்.

தீயை குறைத்து விட்டு அது ஒரு பக்கம் கொதிக்கும்பொழுதே எண்ணெயை காயவைத்து அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு சிவக்க வதக்கி கொதிக்கும் சூப்பில் கொட்டுங்கள்.

மல்லி இலை தூவி தீயை அணைத்து விடுங்கள்.

சுடசுட பருக அருமையாக இருக்கும்.

குறிப்புகள்: