க்ரீம் காளான் சூப்
தேவையான பொருட்கள்:
நறுக்கிய காளான் - 1 கோப்பை
நறுக்கிய வெங்காயம் - 1
மைதா - 1 மேசைக்கரண்டி
வெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
வெஜிடபிள் ஸ்டாக் - 2 கோப்பை
தண்ணீர் - ஒரு கோப்பை
கிரீம் - 1/2 கோப்பை
மிளகு தூள் - 1 தேக்கரண்டி
உப்பு தூள் - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
அடிகனமான பாத்திரத்தில் வெண்ணெயை போட்டு உருக ஆரம்பித்தவுடன் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.
வெங்காயத்தை அதன் நிறம் மாறாமல் வதக்கிய பிறகு பொடியாக நறுக்கிய காளானைப் போட்டு வதக்கவும்.
பிறகு மைதாமாவை போட்டு நன்கு வறுக்கவும். மாவின் பச்சை வாசனை நீங்கியவுடன் தண்ணீரையும், வெஜிடபிள் ஸ்டாக்கையும் சேர்த்து ஊற்றி நன்கு கலக்கவும்.
சூப் சற்று கெட்டியாக ஆகும் வரை கலக்கி விட்டு அடுப்பின் அனலை குறைத்து வைத்து மூடியைப்போட்டு வேகவிடவும்.
பத்து நிமிடம் கழித்து உப்புத்தூள், மிளகுத்தூளைப் போட்டு, க்ரீமை ஊற்றி கலக்கி சூடாக சூப் பவுலில் பரிமாறவும.