கேரட் கொத்தமல்லி சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

கேரட் - 1/2 கிலோ

பெரிய வெங்காயம் - 1

பூண்டு - 6 பல்

கொத்தமல்லி - 1 கட்டு

பிரிஞ்சி இலை - 2

தண்ணீர் - 5 கப்

மிளகுப்பொடி - 1/2 தேக்கரண்டி

வெண்ணெய் - 2 தேக்கரண்டி

இஞ்சி விழுது - 1/4 தேக்கரண்டி

சீரகப் பொடி - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

கேரட், வெங்காயம், பூண்டு தோல் நீக்கி எடுத்து வைக்கவும்.

கொத்தமல்லியை சுத்தம் செய்து, தண்டு தனியாகவும், இலை தனியாகவும் அரிந்து வைக்கவும்.

வாணலியில் வெண்ணெய் போட்டு, வெங்காயம், பூண்டு, பிரிஞ்சி இலை சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.

அதில் கேரட், கொத்தமல்லி தண்டு போட்டு வேக வைக்கவும்.

வெந்ததும் இறக்கி, ஆறியதும் பிரிஞ்சி இலையை எடுத்து விட்டு மற்றவற்றை மிக்ஸியில் அரைக்கவும்.

இத்துடன் இஞ்சி, மிளகுப்பொடி, சீரகப்பொடி சேர்த்து 2 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கி, பொடியாக அரிந்த கொத்தமல்லியை தூவி சூடாகப் சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: