கேபேஜ் டயட் சூப்
தேவையான பொருட்கள்:
கோஸ் - பாதியளவு
காலிஃப்ளவர் - 1/4 பாகம்
ப்ரோகொலி - 1/4 பாகம்
கேரட் - 1
தக்காளி - 1
காளான் - 5
குடை மிளகாய் - பாதி
செலரி - 1
ஸ்ப்ரிங் ஆனியன் - 4
மல்லித் தழை - சிறிது
ஆலிவ் ஆயில் - 2 தேக்கரண்டி
மிளகுத் தூள் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
செய்முறை:
எல்லா காய்களையும் வேண்டிய அளவில் நறுக்கிக் கொள்ளவும்.
பேனில் ஆலிவ் ஆயில் ஊற்றி 2 நிமிடம் கழித்து, ஸ்ப்ரிங் ஆனியனையும், குடைமிளகாயையும் போட்டு வதக்கவும்.
ஐந்து நிமிடம் கழித்து காளான் மற்றும் கோஸை சேர்த்து வதக்கவும்.
பின்னர் ப்ரோகொலி மற்றும் காலிஃப்ளவரை சேர்த்து பிரட்டி விடவும்.
மேலும் செலரி மற்றும் கேரட்டை சேர்த்து 15 கப் தண்ணீர் ஊற்றி ஸிம்மில் 45 நிமிடம் வரை நன்கு மூடி வைக்கவும்.
காய்கறிகள் நன்கு வெந்து, அதில் உள்ள சத்து நீரில் இறங்கியதும் உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து 5 நிமிடம் கழித்து மல்லித் தழை தூவி சூப் பவுலில் பரிமாறவும்.
குறிப்புகள்:
டயட் சூப் என்பதால் உப்பும், மிளகுத் தூளும் கம்மியாக போடவும்.
சிறிது சாதமோ, சிறிது நூடுல்ஸோ சேர்க்கலாம்.
டயட்டுக்கு இல்லை எனில் நம் விருப்பத்திற்கேற்ப காய்கறிகளையோ, தண்ணீரின் அளவையோ மாற்றிக் கொள்ளலாம்.