கிரீம் ஆஃப் சிக்கன் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1

மேகி சிக்கன் கியூப் - 1 (சிறியது)

கிரீம் ஆஃப் சிக்கன் சூப் பவுடர் - 1 1/2 பாக்கெட்

ஸ்வீட் கார்ன் - 1 டின்

பட்டர் - 2 மேசைக்கரண்டி

கார்ன் ஃப்ளார் மாவு - 2 குழிக்கரண்டி

வெள்ளை மிளகு தூள் - 1 தேக்கரண்டி

சோயா சாஸ் - ஒரு துளி

இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி

கருப்பு மிளகு தூள் - தேவைக்கேற்ப

வெங்காயம் - 1

மைதா மாவு - 1/4 கப்

பால் - 3/4 கப்

முட்டை - 1

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை:

சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் சிக்கனை போட்டு நான்கு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் உப்பு, சோயா சாஸ், மேகி சிக்கன் ஸ்டாக், இஞ்சி பூண்டு விழுது போட்டு நான்கு அல்லது ஐந்து விசில் வரும் வரை வேக வைத்து எடுக்கவும். பின்னர் தண்ணீர் தனியாக, சிக்கன் தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

ஒரு கிண்ணத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் கிரீம் ஆஃப் சிக்கன் பவுடரை சேர்த்து கரைத்து வைத்துக் கொள்ளவும். இந்த பவுடர் கிடைக்காதவர்கள் மைதா மற்றும் சோள மாவை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும்.

சிக்கன் வேகவைத்த தண்ணீர், உதிர்த்து வைத்துள்ள சிக்கன்,

ஒரு பெரிய வாயகன்ற பாத்திரத்தில் பட்டரை போட்டு உருகியதும் நறுக்கின வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

அதில் மைதா மாவை ஒரு கையால் தூவி கொண்டே மறு கையால் கரண்டியை வைத்து கிளறவும். அதனுடன் உடனே ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கட்டி பிடிக்காமல் கலக்கவும். அதன் பின்னர் வடித்து வைத்துள்ள சிக்கன் தண்ணீரை ஊற்றி மீண்டும் நன்கு கைவிடாமல் கிளறி விடவும்.

இப்போது வேக வைத்து உதிர்த்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை போட்டு நன்கு கிளறி விட்டு கொதிக்க விடவும்.

அடுத்து ஒன்றிரண்டாக அரைத்து வைத்துள்ள ஸ்வீட் கானை சேர்த்து கிளறி கொத்திக்க விடவும். கார்னை ஊற்றி கிளறியதும், சோள மாவை கரைத்து ஊற்றவும். சோள மாவை ஊற்றிய பிறகு கட்டி பிடிக்கும் அதனால் தொடர்ந்து கிளறவும்.

ஒரு கிண்ணத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நுரை பொங்க அடித்து ஒரு கையால் ஊற்றி கொண்டே மறு கையால் ஒரு போர்க்கை வைத்து கிளறவும். இப்போது சிறிது கவனத்துடன் கிளற வேண்டும், கட்டி பிடித்தால் பொதபொதவென ஆகிவிடும்.

அதன் பின்னர் ஒரு மேசைக்கரண்டி பட்டர் சேர்த்து சிறிது கருப்பு மிளகு தூள் தூவி இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்:

இதனுடன் கட்லெட் அல்லது பக்கோடா, பஜ்ஜி செய்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.