காளான் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பட்டன் காளான் - 5

வெங்காயம் - 1

குடமிளகாய் - 1/2

சீரக பொடி - 1/2 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

தனியா தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காளான், வெங்காயம், குடமிளகாய் எல்லாவற்றையும் சுமாரான துண்டுகளாக நறுக்கி, ஒரு தம்ளர் தண்ணீரில் வேக வைக்கவும்.

வெந்ததும் மிக்ஸியில் இட்டு அரைத்து, பெரும் துளையுள்ள வடிகட்டியில் வடிகட்டவும்.

1 1/2 கப் தண்ணீர், சீரக பொடி, மிளகு தூள், தனியா தூள், உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: