காலி பிளவர் சூப்
தேவையான பொருட்கள்:
காலி பிளவர் - 1/2 பூ
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
எலுமிச்சம்பழம் - 1 மூடி
காய்ச்சிய பால் - 1/2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
சூப் பவுடர் - 1 தேக்கரண்டி
தாளிக்க:
சோம்பு - 1/4 தேக்கரண்டி
மிளகு - 1/4 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1/2 தேக்கரண்டி
பட்டை - 1
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காலி பிளவரை உதிர்த்து எடுத்து உப்பு கலந்த நீரில் போட்டு வைக்கவும்.
வாணலியை அடுப்பில் வைத்து நெய் விட்டு சோம்பு, மிளகு, உளுத்தம் பருப்பு, பட்டை, கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
காலி பிளவரையும் சேர்த்து வதக்கவும்.
இத்துடன் சூப் பவுடர் சேர்த்துக் கிளறி, தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து ஒரு விசில் விட்டு இறக்கவும்.
இறக்கி உப்பு சேர்த்து, எலுமிச்சம்பழம் பிழியவும்.
கடைசியாக பால் சேர்த்து கொத்துமல்லி தூவி சூப் பவுலில் பரிமாறவும்.