காலிஃப்ளவர் சூப்
தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 100 கிராம்
காலிஃப்ளவர் - 1
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 4
பச்சை மிளகாய் - 8
மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
பூண்டு - 4 பல்
சோம்பு, சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிது
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - 2 தேக்கரண்டி
தாளிக்க:
கடுகு, உளுந்து - 1 தேக்கரண்டி
பட்டை - 1
கிராம்பு - 1
அன்னாசிப்பூ - 1
இலை - சிறிது
செய்முறை:
குக்கரில் பருப்பு, மஞ்சள் தூள், பூண்டு, சோம்பு, சீரகத்தூள் சேர்த்து 5 கிளாஸ் தண்ணீர் சேர்த்து 4 விசில் வைக்கவும்.
குக்கரில் ப்ரஷர் அடங்கியவுடன் குக்கரை திறந்து பருப்பை நன்கு மசித்து வெங்காயத்தை பொடியாக நறுக்கி, பச்சை மிளகாயை பருப்புடன் கொதிக்க விடவும்.
காலிஃப்ளவரை நறுக்கி வெந்நீரில் 10 நிமிடம் உப்பு போட்டு மூடி வைக்கவும். பிறகு பூவை பச்சைத்தண்ணீரில் கழுவி பருப்புடன் சேர்த்து வேகவிடவேண்டும். உப்பு சேர்க்க வேண்டும்.
வெந்தவுடன் ஒரு கடாயில் 2 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ, இலை, கறிவேப்பிலை ஆகியவற்றை தாளித்து சூப்பில் கொட்டி மிளகுத்தூள் சேர்த்து கொத்தமல்லி இலையை கிள்ளிப்போட்டு இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.