காரப்பொடி மிளகு சூப் (பிள்ளை பெற்றவர்களுக்கு)

off off off off off 0

தேவையான பொருட்கள்:

காரப்பொடி மீன் - 6

வேக வைக்க:

வெங்காயம் - 1

தக்காளி - 1/2

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

தனியா துள் - 1/2 தேகரண்டி

சீரக தூள் - 1/2 தேக்கரண்டி

தேங்காய்ப்பால் - 1/2 டம்ளர்

இஞ்சி பூண்டு - 1/4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி

நெய் - 1/2 தேக்கரண்டி

கடுகு - 1/4 தேக்கரண்டி

பூண்டு - 4 பல் (தட்டிக்கொள்ளவும்)

வெங்காயம் - 1/4 பாகம்

கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு

செய்முறை:

காரப்பொடி மீனை சுத்தம் செய்து கொள்ளவும். அதில் வேகவைக்க வேண்டியவைகளை போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து குறைந்த தீயில் பத்து நிமிடம் வேக விடவும்.

மூடி போட்டால் பொங்கும் லேசாக மூடி வைக்கவும்.

பத்து நிமிடம் கழித்து தாளிக்க வேண்டியவைகளை போட்டு தாளித்து குழம்பில் (சூப்) கொட்டவும்.

குறிப்புகள்: