காரட் தக்காளி சூப்
தேவையான பொருட்கள்:
வில்லைகளாக நறுக்கிய காரட் - 1
பொடியாக நறுக்கிய தக்காளி - 2
பூண்டு பல் - 2
இஞ்சி - 1/2 அங்குலம்
பிரிஞ்சி இலை - 1
மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
பால் - 50 மில்லி லிட்டர்
புதினா இலை - 2
கொத்தமல்லித் தழை - சிறிது
பொடியாக அரிந்த வெங்காயம் - 1
வெண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ப்ரஷர் குக்கரில் காரட், தக்காளி, பூண்டு, இஞ்சி, புதினா இலை, உப்பு இவைகளை 3/4 லிட்டர் நீரில், மூன்று விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
ப்ரஷர் அடங்கியவுடன் குக்கரைத் திறந்து இஞ்சி, பூண்டு, பிரிஞ்சி இலை இவைகளை நீக்கிவிட்டு, காரட், தக்காளி இவை இரண்டையும் எடுத்து, மிக்ஸியில் ஒரு சுற்று அடித்து மறுபடியும் வெந்தநீரில் கலந்து வடிகட்ட வேண்டும்.
கடாயை அடுப்பில் வைத்து, சூடாக்கி, வெண்ணெய் உருக்கி, அரிந்த வெங்காயத்தை வதக்கி, வடிகட்டிய சாற்றை கலந்து, மிளகுத் தூள் சேர்த்து, 2 கொதி வந்தவுடன், பாலை ஊற்றிச் சூடாக சூப் பவுலில் பரிமாறவும்.
கொத்தமல்லித் தழை தூவினால் அழகு சேர்க்கும்.