காய்கறி சூப் (டயட்)
தேவையான பொருட்கள்:
கோவா (முட்டைக்கோஸ்) - 200 கிராம்
காரட் - 2
தக்காளி - 2
குடைமிளகாய் - 1
செலரி - ஒரு தண்டு
வெங்காயம் - 1
பூண்டு - 10 பல்
கொத்தமல்லி - சிறிதளவு
மிளகு - 2 தேக்கரண்டி
பெருஞ்சீரகம் - 2 தேக்கரண்டி
மல்லி விதை - 2 தேக்கரண்டி
ஏலம் - 3
கிராம்பு - 3
கறுவா - ஒரு துண்டு
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகள், வெங்காயம், பூண்டை பொடியாக நறுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் வெட்டிய காய்கறிகளைப் போடவும்.
ஒரு சுத்தமான துணியில் மிளகு, பெருஞ்சீரகம், மல்லிவிதை, ஏலம், கறுவா, கிராம்பு போட்டு ஒரு மூட்டை மாதிரி கட்டி அப்பாத்திரத்தில் போடவும்.
பின்பு தேவையான அளவு தண்ணீர், உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பில் வைத்து காய்கறிகளை வேகவிடவும்.
காய்கறி வெந்ததும் அந்த சிறிய மூட்டையை வெளியில் எடுத்து விடவும்.
விரும்பினால் எலுமிச்சம்பழப்புளி சேர்த்து சூப் பவுலில் பரிமாறவும்.