காய்கறி சூப்
தேவையான பொருட்கள்:
காய்கறிகள் (கேரட், பீன்ஸ், க்ரின்பீஸ், கார்ன்) - 1 கப்
பூண்டு - ஒரு துண்டு
இஞ்சி - ஒரு துண்டு
பெப்பர் பவுடர் - 1/2 தேக்கரண்டி
வெண்ணெய் - 1/2 தேக்கரண்டி
கார்ன் ஸ்டார்ச் - 1/4 தேக்கரண்டி
பால் - 1/4 கப்
உப்பு - 1/4 தேக்கரண்டி
செய்முறை:
இஞ்சியை தோல் சீவி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் போட்டு உருகியதும் அதில் இஞ்சி, பூண்டு மற்றும் காய்கறிகளை போட்டு வதக்கிக் கொள்ளவும்.
வதக்கிய காய்கறிகளுடன் 2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு ஸ்பூன் தண்ணீர் அல்லது பாலில் கார்ன் ஸ்டார்சை பேஸ்ட் போல் கரைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பானில் பாலை எடுத்துக் கொண்டு அதில் கரைத்து வைத்திருக்கும் கார்ன் ஸ்டார்ச் மற்றும் வேக வைத்த காய்களையும் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
சூப் சற்று கெட்டியான பதம் வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
பரிமாறும் போது சூப் பெளலில் ஊற்றி பெப்பர் பவுடர், புதினா இலைகள், ரோஸ்டட் ப்ரெட் க்யூப்ஸ் இருந்தால் அதையும் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும்.
குறிப்புகள்:
இது சளி, காய்ச்சல், குளிர், மழை காலத்திற்கும் ஏற்றது.
இதேப் போல் தக்காளி சூப் செய்யலாம் இதில் காய்கறிகளுக்கு பதில் வெங்காயம், தக்காளி வதக்கி அதை பாலில் சேர்த்து இதே முறையில்.