எலும்பு ஈரல் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டு எலும்பு - 1/4 கிலோ

நுரை ஈரல் - 150 கிராம்

மிளகுத்தூள்- 2 தேக்கரண்டி

மல்லித்தூள் - 2 தேக்கரண்டி

சீரகத்தூள்- 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 தேக்கரண்டி

வெங்காயம் - 1

தக்காளி - 1

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை - கொஞ்சம்

உப்பு - தேவைக்கு.

செய்முறை:

எலும்பு, ஈரலை சிறிய துண்டுகளாக்கி கழுவிக்கொள்ளவும்.

குக்கரில் எலும்பு, ஈரல் மேலேயும் கொஞ்சம் அதிகம் தண்ணீர் இருக்குமாறு வைக்கவும்.

வெங்காயம், தக்காளியை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றிக்கொள்ளவும்.

அரைத்த வெங்காயம், தக்காளி, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகு, மல்லி, சீரகம், மஞ்சள் தூள்களை சேர்க்கவும். உப்பு தேவைக்கு சேர்க்கவும்.

குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் வைத்து அரைமணி நேரம் வேக வைக்கவும்.

வெந்த பின்பு, சிறிது வெங்காயம், கறிவேப்பிலை தாளித்து கொட்டவும்.

பரிமாறும் போது கொத்தமல்லி இலை சிறியதாக கட் செய்து போடவும். சுவையான எலும்பு ஈரல் சூப் ரெடி.

குறிப்புகள்: