உருளைக்கிழங்கு சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

தோல் நீக்கி நறுக்கிய உருளைக் கிழங்கு - 1/4 கிலோ

பொடிதாக நறுக்கிய வெங்காயம் - 1

பால் - 1/2 கப்

மைதா மாவு - 1 மேசைக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

சீஸ் - 2 மேசைக்கரண்டி

பொடிதாக நறுக்கிய கொத்தமல்லி தழை - சிறிதளவு

உப்பு - ருசிக்கேற்ப

செய்முறை:

உருளைக்கிழங்கை வெங்காயம், உப்பு சேர்த்து வேகவிடவும்.

வெந்தபின் கலவையை ஆறவைத்து மிக்சியில் அரைக்கவும்.

இதனுடன் மைதாமாவு,பால்,மிளகுத்தூள் சேர்க்கவும்.

வாணலியில் இக் கலவையை ஊற்றி சூடாக்கவும்.

சூப் கெட்டியாகி வரும் வரை கிளறி விடவேண்டும்.

இதனுடன் சீஸை சேர்த்து உருகும் வரை கிளறி விடவும்.

பின் கொத்தமல்லி தழை தூவி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்:

தேவையான அளவு தண்ணீர் வேண்டுமானால் சேர்த்துக் கொள்ளலாம்.