உருளைகிழங்கு சூப்
0
தேவையான பொருட்கள்:
உருளைகிழங்கு - 1/4 கிலோ
பெரிய வெங்காயம் - 1
பால் - 1/2 கப்
மைதா மாவு - 1 மேசைக்கரண்டி
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
சீஸ் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
முதலில் உருளைகிழங்கை தோல் நீக்கி வெங்காயம், உப்பு சேர்த்து வேகவைக்கவும்.
வெந்ததும் இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் நன்கு அரைக்கவும்.
இதனுடன் மைதாமாவு, பால், மிளகுதூள் சேர்க்கவும்.
அடுப்பில் இந்த கலவையை வைத்து சூடாக்கவும்.
தண்ணீர் தேவைக்கு ஏற்ப சேர்த்துக்கொள்ளவும்
சூப் கெட்டியாகும் வரை கிளறிவிடவும்.
இதனுடன் சீஸை சேர்த்து உருகும் வரை கிளறி விடவும்.
பின் கொத்தமல்லி இலை சேர்த்து இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.