ஈஸி மஷ்ரூம் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

மீடியம் சைஸ் மஷ்ரூம் - 10

பூண்டு - 10 பல்

நெய் - 2 தேக்கரண்டி

பட்டை - ஒரு துண்டு

கொத்தமல்லி - சிறிது

மிளகு - தேவைக்கு

உப்பு - தேவைக்கு

செய்முறை:

மஷ்ரூம் சுத்தம் செய்து நறுக்கி வைக்கவும்.

பூண்டு தோல் நீக்கி நறுக்கி வைக்கவும். மிளகை பொடி செய்து கொள்ளவும்.

பாத்திரத்தில் நெய் விட்டு காய்ந்ததும் பட்டை தாளிக்கவும்.

இது நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கவும்.

பின் நறுக்கிய மஷ்ரூம் சேர்த்து பிரட்டி 2 - 3 கப் நீர் விட்டு தேவையான உப்பு போட்டு கொதிக்க விடவும்.

மஷ்ரூம் வெந்ததும் மிளகை தூவி ஒரு கொதி விட்டு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலை தூவி இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: