ஈஸி கிட்ஸ் வெஜிடபிள் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

பீன்ஸ் - 2

காரட் - 1

பேபி உருளை - 1

பச்சை பட்டாணி - சிறிதளவு

சின்ன வெங்காயம் - 5

பூண்டு - ஒரு பல்

தக்காளி - 2

கறிவேப்பிலை - சிறிதளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகள் அனைத்தையும் கொஞ்சம் பெரிய துண்டுகளாக நறுக்கி வைத்து கொள்ளவும். வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.

குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் போட்டு தாளிக்கவும். பிறகு வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை காய்கறிகள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். இதில் தக்காளி, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

காய்கறி கலவையுடன் தேவையான அளவு தண்ணீர், உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து குக்கரை மூடி வைக்கவும். 3 விசில் வந்ததும் 5 நிமிடம் சிம்மில் வைத்து இறக்கவும்.

இறுதியாக மிளகு தூள் தூவி இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்:

காய்கறிகளை குக்கரில் வேக வைத்ததனால் சாதத்தில் சேர்த்து பிசைந்து கொடுக்கலாம்.

சூப்பை குழந்தைகளுக்கு இட்லி தோசை சாதத்தில் சேர்த்து கொடுக்கலாம்.