ஆட்டுக்கால் பாயா

on on on off off 1 - Good!
3 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கால் - 2

வெங்காயம் - 2

தாக்காளி - 4

பச்சைமிளகாய் - 4

இஞ்சி பூண்டு விழுது - 5 தேக்கரண்டி

கொத்தமல்லி, புதினா - 1 கப்

மைதாமாவு - 2 தேக்கரண்டி

பட்டை, ஏலக்காய், கிராம்பு பொடி - 1/2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி

சீரகத்தூள் - 1 தேக்கரண்டி

மிளகுதூள் - 1 தேக்கரண்டி

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தேங்காய் பால் - 2 கப்

நல்லெண்ணெய் -2 குழிகரண்டி

உப்பு - தேவைக்கு

செய்முறை:

ஆட்டுக்காலை சுத்தம் செய்து வெட்டி வைக்கவும்

பிரசர் குக்கரில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய் வதக்கவும்

பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் கொத்தமல்லி புதினாவை சேர்க்கவும்.

பின்னர் தாக்காளி சேர்த்து வதக்கி குழைந்ததும் தூள் வகைகள் அனைத்தையும் சேர்க்கவும்

மசாலா வாசனை போனதும் ஆட்டுக்காலையும் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கி ஒரு கப் நீர் விட்டு நன்கு வேகவிடவும்.

கால் நன்கு வெந்ததும் தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும்.

மைதாவில் நீர் ஊற்றி கரைத்து அதையும் சேர்த்து கொதிக்க விடவும்

கெட்டியான பத்தில் வரும். பின் கொத்தமல்லி தூவி இறக்கி சூப் பவுலில் பரிமாறவும்.

குறிப்புகள்: