ஆட்டுக்கால் சூப் (3)
0
தேவையான பொருட்கள்:
ஆட்டுக்கால் - 2
சின்ன வெங்காயம் - 6
பூண்டு - 4 பல்
மிளகு - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 தேக்கரண்டி
தனியா - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - 10
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
ஆட்டுக்காலை சுத்தம் செய்து, சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
மிளகு, சீரகம், தனியா, வெங்காயம், பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து நைசாக அரைக்கவும்.
குக்கரில் ஆட்டுக்காலுடன் அரைத்த விழுது, உப்பு, 8 தம்ளர் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி 10, 15 விசில் வரும் வரை விட்டு சூப் பவுலில் பரிமாறவும்.
குறிப்புகள்:
இதை முதல் நாள் இரவே கூட வைத்து விட்டு, மூடியை திறக்காமல் வைத்திருந்து, காலையில் சூடு செய்து குடிக்கலாம்.