ஆட்டுக்கால் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கால் - 2

இஞ்சி பூண்டு விழுது - 4 தேக்கரண்டி

கசகசா - 2 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

மஞ்சள் - 1 துண்டு

கறிவேப்பிலை - 1 கொத்து

கொத்தமல்லி - 1 கொத்து

வெங்காயம் - 3

பச்சை மிளகாய் - 3

தக்காளி - 4

நல்லெண்ணெய் - தாளிக்க

மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஆட்டுக்காலை சுத்தம் செய்து இஞ்சி பூண்டு விழுதுடன் அவித்துக்கொள்ளவும்

அம்மியிலோ மிக்ஸியிலோ கசகசா, மஞ்சள், சீரகம் அரைக்கவும்

கொதிக்கும் சூப்பில் அரைத்த விழுது, தக்காளி, பச்சை மிளகாய் போடவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, வெங்காயம் தாளிக்கவும்.

பின் அதை சூப்பில் கொட்டி கொதிக்க விடவும்.

இறக்க போகும் 3 நிமிடங்களுக்கு முன் பொடியாய் அரிந்த கொத்தமல்லி, மிளகு தூள், உப்பு சேர்த்து இறக்கி பரிமாறவும்.

குறிப்புகள்: