ஆட்டீரல் சூப்

off off off off off 0

தேவையான பொருட்கள்:

ஈரல் - 1/4 கிலோ

வெங்காயம் - 2

தக்காளி - 2

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

தனியா - 1/2 தேக்கரண்டி

இஞ்சி - ஒரு சிறிய துண்டு

பூண்டு - 2

காய்ந்த மிளகாய் - 2

மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

கொத்தமல்லி - 1 மேசைக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி

செய்முறை:

ஈரலை நன்கு கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

இஞ்சி பூண்டு, மிளகு சீரகம், தனியா ஆகியவற்றை அரைத்துக் கொள்ளவும்.

வெங்காயம் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரில் எண்ணெயை காய வைத்து காய்ந்தமிளகாய், வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும். பிறகு அரைத்த விழுதைப் போட்டு மஞ்சள்தூளையும் போட்டு நன்கு வதக்கவும்.

பிறகு நறுக்கி வைத்துள்ள ஈரலை கொட்டி உப்பை தூவி நன்கு வதக்கவும்.

பிறகு இரண்டு கோப்பை வெது வெதுப்பான நீரை ஊற்றி குக்கரை மூடி வேகவைக்கவும்.

நன்கு வெந்தவுடன் கொத்தமல்லியை தூவி சூடாக சூப் பவுலில் பரிமாறவும் .

குறிப்புகள்: