அகத்திக்கீரை சால்னா
0
தேவையான பொருட்கள்:
அகத்திக்கீரை (கொழுந்தாக) - சிறிய கட்டு
தாளிக்க தேவையான பொருட்கள்:
சிறிய வெங்காயம் - 100 கிராம் (நறுக்கிக் கொள்ளவும்)
பூண்டு - 4 பல் ( தட்டிக்கொள்ளவும்)
மிளகாய் வற்றல் - 2
சீரகம் - 1/4 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
அரைக்க தேவையானவை:
தேங்காய் துருவல் - 2 மேசைக்கரண்டி
வறுத்த அரிசி - 1 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு - 5
உப்பு - தேவைக்கு
செய்முறை:
அகத்திக்கீரை ஆய்ந்து அரிசிக்கழனியில் கழுவி வைத்துக் கொள்ளவும்.
குக்கரில் எண்ணெய் விட்டு சீரகம், உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், வெங்காயம், பூண்டு போட்டு வதக்கி, பின்பு கீரை உப்பு சேர்த்து வதக்கவும்.
பின்பு அரைத்த தேங்காய் கலவையை போட்டு 4 கப் தண்ணீர் சேர்க்கவும்.
குக்கரை மூடி ஒரு விசில் வைத்து இறக்கி பரிமாறவும்.