ஹோல்வீட் தோசை
3 - Great!
4 நட்சத்திரங்கள் - 3 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
முழு கோதுமை - 2 கப்
இட்லி அரிசி – 1 கப்
உளுந்து – கால் கப்
சின்னவெங்காயம்-10 (அ) வெங்காயம் - 1
சின்ன தக்காளி - 1
சீரகம் - 1 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 4 (காரத்திற்கேற்ப)
கொத்தமல்லிதழை - ஒரு கைப்பிடி
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
இஞ்சி - 1 துண்டு
கேரட் துருவல் – ½ கப் (விருப்பப்பட்டால்)
எண்ணை - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோதுமையையும் அரிசியையும் உளுந்தையும் ஒன்றாக 8 மணி நேரம்
ஊறவைக்கவும்
பின் கழுவி களைந்து அரைக்க தேவையானவை எல்லாம் கலந்து மைய தோசை மாவு பதத்திற்கு அரைக்கவும்..எடுக்குமுன் உப்பு கலந்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
பின்பு தோசைக்கல்லில் திட்டமான தோசைகளாக ஊற்றி சுற்றிலும் எண்ணைவிட்டு மிதமான தீயில் நன்கு வேகவிட்டு எடுக்கவும்.
குறிப்புகள்:
விருப்பமான சட்னி,குருமா,சாம்பார்,குழம்பு வகைகள் வைத்து சாப்பிடலாம்.