ஹாட் அன்ட் ஸ்வீட் தோசை
8 - Good!
3 நட்சத்திரங்கள் - 8 மதிப்பாய்வின் அடிப்படையில்
தேவையான பொருட்கள்:
தோசை மாவு - 1 கப்
சாம்பார் பொடி - 1 தேக்கரண்டி
சர்க்கரை - 1 தேக்கரண்டி
நெய் - 1 தேக்கரண்டி
எண்ணைய் - தோசைக்கு ஊற்ற
செய்முறை:
தோசைக்கல்லில் தோசையை ஊற்றும் போது மெல்லிசாக ஊற்றாமல் ஊத்தப்பத்திற்கு ஊற்றுவ்து போல் ஊற்றாமலும் கொஞ்சம் திக்காக ஊற்றவும்.
அதன் மேல் சாம்பார் பொடியை பரவலாக (1 தேக்கரண்டி அளவில் பாதி போட்டால போதும்) தூவவும்.
சர்க்கரையை 3 சிட்டிகை அளவில் எடுத்து தோசையின் மேல் தூவி எண்ணையை (எப்போதும் தோசைக்கு ஊற்றுவது போல்) ஊற்றவும்.
திருப்பி போடு எடுக்கவும்.
இதற்கு தொட்டுக் கொள்ள நெய் வைத்துக் கொள்ளாவும்.
மிகவும் ருசியான ஹாட் அன்ட் ஸ்வீட் தோசை ரெடி.