ஸ்டஃப்டு தோசை

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

அரைத்த தோசை மாவு - 500 கிராம்

கேரட் - 100 கிராம்

கோஸ் - 100 கிராம்

வேகவைத்த பட்டாணி - 100 கிராம்

பச்சைமிளகாய் - 4

கடுகு - 1 மேசைக்கரண்டி

உளுத்தம் பருப்பு - 1 மேசைக்கரண்டி

கடலைப்பருப்பு - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் + நெய் - 100 கிராம்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

காய்கறிகள் அனைத்தையும் மெல்லியதாக நறுக்கவும்.

ஒரு சட்டியில் மூன்று கரண்டி எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளித்து உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பை போட்டு பொரிந்ததும் நறுக்கி வைத்த காய்கறி, கரம் மசாலா, சீரகத்தூளுடன் அனைத்தையும் அரைகப் தண்ணீர் ஊற்றி வேகவைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒரு ஆப்பை மாவை ஊற்றி மெல்லியதாக தோசை வார்க்கவும்.

அதன் மேலே காய்கறி கலவையை எடுத்து தோசை மேல் போட்டு பரப்பி அதன் மேலே இன்னொரு கரண்டி மாவை எடுத்து காய்கறி கலவை மேலே ஊற்றி காய்கறியை மூடி சுற்றிலும் எண்ணெய் விட்டு திருப்பிப்போட்டு சிவந்ததும் எடுக்கவும்.

குறிப்புகள்: