வெந்தயக்கீரை ரோட்டி

on on on off off 5 - Good!
3 நட்சத்திரங்கள் - 5 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

மைதா மாவு - 1/4 கிலோ

நறுக்கிய வெந்தயக் கீரை - 1 கட்டு

பொடியாக நறுக்கிய மல்லித் தழை - 1/2 கப்

பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 4

நறுக்கிய தக்காளி - 1

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

நெய் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெந்தயக் கீரையுடன், மல்லித்தழை, பச்சைமிளகாய், தக்காளி, உப்பு, மிளகாய்த்தூள், நெய் கலந்து வேக வைக்கவும்.

தண்ணீரில்லாமல் நன்றாக வெந்தபின் இறக்கிவிடவும்.

ஆறியபின் மைதாமாவுடன் கலந்து கெட்டியாக பிசையவும்.

இதை சப்பாத்திக்கு உருட்டுவதைப் போல சிறு சிறு வட்டங்களாக இட்டு வைக்கவும்.

வாணலியில் 2 கப் எண்ணைய் ஊற்றி செய்து வைத்துள்ள வட்டங்களை போட்டு பொரிக்கவும்.

குறிப்புகள்: