வெண் பொங்கல் (3)
தேவையான பொருட்கள்:
வேகவைக்க:
பச்சரிசி - 1/2 டம்ளர்
லேசாக வறுத்த பாசி பருப்பு - 1 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
உளுந்து - 1 தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு பின்ச்
துருவிய இஞ்சி - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
நெய் - 2 தேக்கரண்டி
முந்திரி - 5
மிளகு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/2 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 1
இரண்டாக கிள்ளியகறிவேப்பிலை - 3 தேக்கரண்டி
செய்முறை:
அரிசி, பருப்பு, உளுந்து அனைத்தையும் ஐந்து நிமிடம் ஊற வைக்கவும்.
மூன்று டம்ளர் தண்ணீரை குக்கரில் கொதிக்க விட்டு அரிசியை களைந்து போட்டு உப்பு, பெருங்காய பொடி துருவிய இஞ்சி சேர்த்து பாதி வெந்ததும் தாளித்து வேண்டியவைகளை தாளித்து கொட்டி குக்கரை மூடி மூன்றாவது விசில் வந்ததும் ஆஃப் பண்ணி விட்டு ஆவி அடங்கியதும் திறந்து தேவைப்பட்டால் சாப்பிடும் போதும் நெய் கொஞ்சம் சேர்க்கலாம்.