வெண் பொங்கல் (10)

on on on on on 1 - Excellent!
5 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

பாசிப் பருப்பு - 1/4 கப்

நெய் - 1 மேசைக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

முந்திரி பருப்பு - 15

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் கொதிக்க ஆரம்பித்தவுடன் பாசிப் பருப்பினை முதலில் போடவும்.

பருப்பு முக்கால் பாகம் வெந்தவுடன் அரிசியைக் நன்றாகக் கழுவி, களைந்துப் போடவேண்டும்.

அரிசியும் பருப்பும் நன்கு வெந்து குழைந்தபின் உப்பு சேர்த்து இறக்கி வைக்கவும்.

ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்தவுடன், சீரகம், தட்டிய மிளகுத்தூள், முந்திரிப்பருப்பு முதலியவைகளைப் போட்டு சிவக்க வறுத்து பொங்கலில் போட்டு நன்கு கிளறி விடவும்.

குறிப்புகள்: