வெண் பொங்கல் (1)

on on off off off 1 - Ok!
2 நட்சத்திரங்கள் - 1 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

தரமான பச்சரிசி - 1 கப்

பாசிப்பருப்பு - 1/4 கப்

தண்ணீர் - 2 1/2 கப்

பசும்பால் - 1/2 கப்

தாளிக்க:

நெய் - 1 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

மிளகு - 1/2 தேக்கரண்டி

பொடியாக நறுக்கிய இஞ்சி - ஒரு சிறிய துண்டு

முந்திரிப் பருப்பு - 10

பொடியாக நறுக்கிய தேங்காய் - 1/4 கப்

செய்முறை:

பருப்பை லேசாக வறுத்து கொள்ளவும். அரிசியை ஊறவைக்கவும்

அரிசியையும், பருப்பையும் சேர்த்து தேவைக்கு உப்பும் சேர்த்து 2 1/2 கப் தண்ணீரும் சேர்த்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.

பிறகு அதில் பாலை கலந்து விடவும். நெய் காயவைத்து அதில் சீரகம், மிளகு, முந்திரிப்பருப்பு இஞ்சியை தாளித்து சாதத்தில் கொட்டவும். தேங்காயையும் கலந்து பரிமாறவும்.

குறிப்புகள்:

தேங்காய் சட்னி, சாம்பாருடன் பரிமாறவும்.