வெண் பொங்கல்

on on off off off 4 - Ok!
2 நட்சத்திரங்கள் - 4 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 கப்

பயத்தம் பருப்பு (பாசி பருப்பு) - 1/2 கப்

பால் - 1 டம்பளர்

மிளகு - 1/4 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

இஞ்சி - 3 அங்குல துண்டு

பச்சை மிளகாய் - 2

கறிவேப்பிலை - 5 இலைகள்

பெருங்காயம் - சிறிதளவு

முந்திரி - 10

எண்ணெய் - 3 தேக்கரண்டி

நெய் - 4 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியையும் பருப்பையும் களைந்து குக்கரில் நன்கு வேக விடவும். பிறகு வாணலியில் எண்ணெய் விட்டு மிளகு சீரகம் மற்றும் முந்திரியைப் போட்டு நன்கு பொரித்துக் கொள்ளவும். இப்போது அடுப்பை அணைத்துவிட்டு பொடிப் படியாக நறுக்கிய இஞ்சி பச்சை மிளகாய் கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத்தைப் போட்டு கரண்டியால் நன்கு கலக்கவும்.

பிறகு பாலை அதில் சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பால் நன்கு கொதித்த உடன் வேக வைத்த அரிசி பருப்பை அதில் கொட்டி உப்பு போட்டு அடி பிடிக்காமல் நன்கு கிளறவும். பொங்கல் சரியான பதத்திற்கு வந்த உடன் 4 ஸ்பூன் நெய் சேர்த்து சூடாக பரிமாறவும்.

குறிப்புகள்: