வெண்பொங்கல்

on on on off off 24 - Good!
3 நட்சத்திரங்கள் - 24 மதிப்பாய்வின் அடிப்படையில்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி - 1 ஆழாக்கு

பாசிப்பருப்பு - 1/4 அழாக்கு

உப்பு - தேவையான அளவு

தாளிக்க:

மிளகு - 1 தேக்கரண்டி

சீரகம் - 1 தேக்கரண்டி

முந்திரி பருப்பு - 10

பெருங்காயபொடி - 1 சிட்டிகை

நெய் - 2 தேக்கரண்டி

எண்ணெய் - 2 தேக்கரண்டி

நசுக்கிய இஞ்சி - 1 தேக்கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

செய்முறை:

முதலில் அரிசியையும் பருப்பையும் சேர்த்து கழுவி அதனுடன் 3 ஆழாக்கு தண்ணீர் விட்டு தேவையான அளவு உப்பு போட்டு குழைய வெகவைத்துக் கொள்ளவும்

ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் நெய், எண்ணெய், விட்டு சூடானதும் அதில் முந்திரி பருப்பை போட்டு லேசாக வறுத்து அதனுடன்

மிளகு, சீரகம், இஞ்சி, பெருங்காய பொடி, கறிவேப்பிலை சேர்த்து பொரிய விட்டு வாசனை வந்ததும் வேக வைத்த பொங்கலில் கொட்டி கிளறி எடுத்து கொள்ளவும்

குறிப்புகள்:

தேங்காய் சட்னி சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்