வெஜ் சேமியா கிச்சடி
தேவையான பொருட்கள்:
சேமியா - 1 கப்
கேரட் - 1
பீன்ஸ் - 5
கோஸ் - சிறிது
வெங்காயம் - 1
பச்சைமிளகாய் - 1
தக்காளி - 1
இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
கரம் மசாலா - 1 தேக்கரண்டி
தண்ணீர் - 1 1/2 கப்
பட்டை, கிராம்பு, ஏலக்காய் - 1
நெய் - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிது
எண்ணை - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
காய்களை மெல்லியதாக நீளவாக்கில் நறுக்கவும்.
வெங்காயம்,மிளகாய்,தக்காளி நறுக்கி வைக்கவும்.
வாணலியில் நெய் விட்டு சேமியாவை வறுத்துக்கொள்ளவும்.அதே வாணலியில் எண்ணை ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்கவும்.
இஞ்சி பூண்டு விழுது போட்டு வதக்கி தக்காளி சேர்க்கவும்.
காய்களை போட்டு நன்கு வதக்கவும். மஞ்சள்தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கி 1 கை தண்ணீர் தெளித்து மூடி வைக்கவும்.
காய் வெந்தவுடன் 1 1/2 கப் தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கொதிக்கவிடவும்.
தண்ணீர் கொதித்தவுடன் சேமியாவை போட்டு கிளறி வேகவிடவும்.தண்ணீர் வற்றி சேமியா வெந்தவுடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.